ஆண்களை ரசித்தால்

பைக் கண்ணாடியில் தலை கோதும் பொழுதும்
நீ அழகு

அரும்பிய மீசையை தடவிப்பார்க்கும் பொழுதும்
நீ அழகு

வெள்ளை வேட்டி மடித்து நடக்கும் பொழுதும்
நீ அழகு

காதலிக்காக கால்வலிக்க காத்திருக்கும் பொழுதும்
நீ அழகு

நண்பனுக்காக சண்டையிடும் பொழுது
உன் கோவம் அழகு

தங்கையிடம் செல்ல சண்டையிடும் பொழுது
உன் பாசம்அழகு

சட்டையில் மேல்பட்டன் கழட்டிய திமிரான
நடை அழகு

பாதி இரவில் வீட்டிற்கு பரிதாபமாய்
முகத்தை மாற்றும் நடிப்பும் அழகு...

எழுதியவர் : viyani (23-Jul-15, 9:38 am)
பார்வை : 44

மேலே