பிணக்குழி போன கதை யார் அறிவார்

பிண குழி போன கதை யார் அறிவார் !
---------------------------
ஒடும் சாக்ககடை அருகே
ஒரு பத்து குடிசைகள்
ஒர் காற்று ஓங்கி அடித்தால்
ஒடிந்து விழும் என்றிருக்கும் !

சேரு கலந்த மண்ணாய் அங்கு
தெரு சாலைகள் !
வீட்டின் முன்னே
சேர்த்துவைத்த குப்பைகள்
மலைபோல நிறைந்திருக்கும் !

காலையிலே எழுந்த கணவன்
கைவண்டி தள்ளி செல்வான்
மனைவி முன்னே !

தெரு தெருவாய்
குப்பைகளை அள்ளி போட்டு
ஓடாத சாக்கடையை
சட்டியிலே அள்ளி போட்டு
சுத்தம் செய்வான்
சலிப்பெதும் யில்லாமல் !

இன்னும் சரியில்லை
என்றொருத்தி சத்தம் செய்வாள்
சரியென்று
மிதக்கும் மலத்தினையும்
சட்டியிலே அள்ளிகொள்வான்
சங்கடமே இல்லாமல் !

ஊரெல்லாம் சுத்தம் செய்யும்
சோதரனே
உன்வீட்டு குப்பையை
யார் சுத்தம் செய்வார் ?
மலகுழி அருகே நீ
மண் வீடு கட்டி யிருப்பதால்
உன் மகன் பிணகுழிக்கு
போன கதை யார் அறிவார் ?

எழுதியவர் : (31-Jul-14, 12:45 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 63

மேலே