நான் குற்றவாளியே
காலப்போக்கில் மாறிப்போன என்னவளே...
காயம் கண்டும் ...
கண்ணீர் தீர்ந்தும் காத்துகிடக்கிறேன் இன்னமுமே...!
உன்னை அலைபேசியில்
அழைத்த போதெல்லாம் நீ சொன்ன வார்த்தைகள்...
"என்னை மன்னித்துவிடு...! "
உண்மையில் குற்றம் செய்தவன் நானே!
உண்மையாக இருப்பதே குற்றம் தானே!
ஒரு பார்வை....
இரண்டு அலைபேசி எண்களின் இடமாற்றம்...
மூன்று நாட்களாய்
நான்கு மணிநேரம் நள்ளிரவு பேச்சு...
ஐந்தாம் நாள் ஐநாக்ஸ் சினிமா...
ஆறாம் நாள் மெரினா ஓரம்...
ஏழாம் நாள் எல்லாம் போரடித்து...
எட்டாம் நாள் எட்டி உதைத்து விட்டு போகும்....
இந்த நவீன காதலுக்கு மத்தியில்...
பேசாமல் பார்க்காமல் ...
நினைவாலே உன்னுடன் வாழ்ந்த நான்...
கிறுக்கன் தான்!
குற்றவாளி தான்!
கரித்துண்டாய் என்னில் புதைந்த என் காதல்...
காலப்போக்கில்
வைரமானது...
பாவம் உனக்கெங்கு தெரியும்!
காற்றடித்தால் காணாமல் போகும்
சருகாகி போன
உன்... "உயிருக்கு உயிரான" காதலை ...
உணராமல் போன குற்றவாளி நான்!
நான் நானாக இருப்பதே குற்றம் தான்...
நான் என்ன செய்ய...
"நம் வாழ்கையை நமக்கு பிடித்தவர்களோடு
வாழாவிடின் ...
இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்?"
என்றென்னும் நான்
குற்றவாளியே ...
காலம் இருக்கையில் காதலித்து ...
பிரிவின் போது புத்தி பேதலித்து ...
"எனக்கு முக்கியம் என் தாயா ??? நீயா??? " என்றாய்!
பாவம் நீ...
உனக்கு எப்படி தெரியும்??
காதலை போராடி தான் பெற முடியும் என்று???
தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு...
காதலை கண்ணீரோடு கரைத்து விட்டாய்!
கலைந்து போகும் மேகமாய் எண்ணி ...
என்னை நீ மறந்து விட்டாய்!
கேள்விகளோடு
கிறுக்கனாய் உன்னை எண்ணியே ...
உனக்காய் வாழ்ந்தவனுக்கு...
"விடை கொடுத்தாய் !"
விடைபெறமுடியாமல் தவிக்கும் நான்..
குற்றவாளியே...
"நீ என்னை மன்னித்துவிடு...!"
நானும் மாறபோவது இல்லை...
என் காதலும் சரி...
பாறையாகி போனது என் மனம் உன்னால்....
அதனால் தான் என்னவோ ...
இன்னமும் உன் காதல்
அழியாமல்...
எழுத்தாய் என் இதயப்பாறையில் ....!
இவன்,
நிலவின் நண்பன் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
