indhuarchunan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : indhuarchunan |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : 30-Dec-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-May-2013 |
பார்த்தவர்கள் | : 450 |
புள்ளி | : 5 |
பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!
................... நீ ...................
பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...
அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...
மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்
தளத்தில் உள்ள முகம் தெரியாத
பல நண்பர்களுக்கு நாம் வாழ்த்துக்கள் சொல்கிறோம்,
இன்று நம்மில் பலர் எழுத காரணமாக இருக்கும் என்
கவிஞன் பாரதிக்கு வாழ்த்து சொல்வோம் ...
பாரதியே நின் புகழ் வாழ்க
வாழ்க வாழ்க வாழியவே....
எது எதற்கோ நேரம் ஒதுக்குகிறோம் தமிழ் உணர்வை ஊட்டிய விடுதலை கவிங்கனுக்கு வாழ்த்து சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குவோம் இன்று நம் தளத்தில் பிறந்தநாள் காண்பவர் பாரதி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல விரும்புவோர்கள் சொல்லலாம்.
கசடாகிக் கவலையுற்ற
முகத்தோடு கலங்கிச்
சலனமற்றுக் கிடக்கிறேன் !
உபயோகமற்றதாய் நீயுணரும்
உனது தினவுகளின்
கழிவுகளையென்னில்
அரவமற்று
விட்டெறிந்து செல்கிறாய் !
உனது வன்செயல்களுக்கான
ஆட்சேபனைகளாக
மிகுந்த பரிச்சயமுள்ள
எனது மேற்பரப்பில்
புறவெளிப் பயன்பாட்டினனைத்து
அசுத்தங்களையும்
என்னில் கழுவிக் கரைத்து
உன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறாய் !
ஆறாகயிருந்தால்
கோடையிலெனது மணலள்ளிச்
சென்றிருப்பாய்
நானோ ஏரியாகிப் போனதால்
கடைசிப் போர்வீரனும்
இரத்தச் சகதியில்
கிடப்பது போல்
கசடுதேங்கிக் கிடக்குமென்
வயிற்றின் வெடிப்புகளில்
மரித்தும் செரிக்காத
பேரழிவு நெகிழிகளை
கொ
வாசற்படிக்கும்
பின் கொல்லைப் புறத்திற்குமான
எனதிருப்பிடம் சுற்றி
அளப்பற்கரிய பாசத்துடனும்
அளவிடமுடியா நேசத்துடனும்
பெருந்திறமையுடன்
மிக ஜாக்கிரைதையாக
உருவாக்கியிருக்கிறாய்
எனக்கான
உன் முள் வேலியினை...
அதைத்தாண்டி
வெளிச்சுற்றிப் பறக்க
யத்தனிக்குமென்
நினைவுகளின் ரக்கைகளை
சீரமைப்பெனும் சிறுகத்தரியால்
மிகு தந்திரத்துடன்
என் அனுமதிபெற்றே
வெகு சிரத்தையுடன்
கத்தரிக்கிறாய்...
உலகத்தின் வரைபடத்தை
என் தங்கக் கூண்டிற்குள்
வகைபடுத்துகிறாய் -
தேனும் , பாலும்
தினம் தினம்
கலந்தெனுக் களிக்கையில்
பறப்பதற்கென படைக்கப்பட்ட
என் பயன்படா ரக்கைகள்
பற்றி
கிஞ்சித்தும்
மொட்டு என்னும் முகமூடி போட்டு
தென்றல் என்னும் சகோதரன் இன்னிசையால் வருடிவிட இயற்கை அன்னை ஈன்றேடுடுத்த
முதற்குழந்தை சிகப்பு ரோஜா