என்ன தவம் செய்தேனடி..
மைஇருட்டு வேளையிலே
மையிட்டு வந்தவளே
மச்சானின் வேட்டி இழுத்து
மல்லுக்கட்ட வந்தாயோ
கருவாட்டு வாசனைக்கு மயங்கி
போகும் பூனையாய்
கள்ளி உன் அழகில் மயங்கித்தான்
போனேண்டி ..
மத்தியான வேளை முதல்
மதி முட்டும் மாலை வரை
உன் மடியில் நான் மடிந்து
கிடந்தேனே மறந்தாயோ
தலையணையில் தலை
வைக்க கூடாதென்று மடி
கொடுக்க வந்தாயா மறுபடியும்
ஊர் உறங்கும் நேரத்திலும்
உன் மடியில் நான் இருக்க
என்ன தவம் செய்தேனோ
என் காதலியாய் நீ கிடைக்க .......

