2013

நோட்டின் கிறுக்கல் நிறைந்த
கடைசி பக்கம்
போல்

சிப்பியின் வயிற்றைக்
கீறும் சிறு தூசி
போல்

ரயில் கடந்த பின்னும்
தடதடக்கும் தண்டவாளம்
போல்

பூ உதிர்ந்த பின்னும்
வாசம் சுமக்கும்
காம்பைப்போல்

ஒவொருமுறை தேதி
எழுதும் போதும்
அகல மறுக்கிறது
இந்த 2012!!!

பழகிக்கொள்கிறேன்
2013 ஐ வரவேற்க!!!

எழுதியவர் : சரவணா (5-Jan-13, 3:34 pm)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 121

மேலே