மனுநீதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மனுநீதி
இடம்
பிறந்த தேதி :  20-May-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jun-2022
பார்த்தவர்கள்:  250
புள்ளி:  22

என்னைப் பற்றி...

நான் மாய்ந்தால், பிரபஞ்சம் மாய்ந்திடுமோ?
ஆகாயம் வீழ்ந்திடுமோ?
ஆழி அலை நின்றிடுமோ?
மழை பொழியாதோ கருமேகம்?
கடல் சேராதோ பெருநதியும் ?
என் பிறப்பு, என் இறப்பிலே முடியும்.
உயிரனைத்தும் என்னோடு அழிந்து போகுமோ?
இறக்கும்வரை வாழ வேண்டும்.
இதுவே எனது இலட்சியம்.

என் படைப்புகள்
மனுநீதி செய்திகள்
மனுநீதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2022 9:43 pm

என் இதயம் துடிக்கும் சத்தம், பேரிடி போல...
மலர்கள் மலர்வது, மாபெரும் போர்க்களம் போல...
சிற்றோடைத் தண்ணீர் சலனம், சீறி வரும் ஆழிப்பேரலை போல...
சிறுவண்டு ஓட்டம், சீறிப் பொங்கும் எரிமலை போல...
நீயென் கன்னத்தில் அறைந்த தடம், மருதாணி சிவப்பாக...
இருந்தும் என் நெஞ்சம் இப்போதும் உன் முகம் தேடுவதுதான் காதலோ?!

மேலும்

மனுநீதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 5:29 pm

எந்நிலை வரினும்
தன்நிலை மறவான்
இன்னலை அடையான்...

மேலும்

மனுநீதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 4:12 am

அவள் கணுக்கால் கொலுசு சத்தம்
என் காதோரம் தாலாட்டும் நித்தம்...
அவள் வெள்ளி மூக்குத்தி ஜொலிக்க
என் உயிரை மொத்தமாகக் குடிக்க...
அவள் மாராப்பு சேலையில்
என் வீராப்பு மறந்ததே...

மேலும்

மனுநீதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2022 4:29 pm

ஒரு வழிச்சாலையின் எதிர்த்
திசையில் உனைப் பார்த்தேன்.
அந்நொடி என்னுள் ஆயிரம் பரவசம்.
"யூ-டர்ன்" போட முடியாத இடம்.
எப்படியும் திரும்புவேன் என
என்னைப் பிடிக்க காத்துக்கொண்டிருக்கும்
போக்குவரத்துக் காவலர்.
அவர் ஏமாந்து போனார்.
நான் சாலை விதிகளை மீறவில்லை.
உன்னைக் கடந்து போனேன்.
எனக்கு மட்டும்தானே தெரியும்,
என் மனது எல்லா விதிகளையும் மீறி
உன் பின்னால் தொடர்கிறது என்று.

மேலும்

மனுநீதி - மனுநீதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2022 5:07 pm

வானவில் வடிவில் கூந்தல்...
அதன் கீழே வான்போன்ற நெற்றி...
இரு புருவமும் மலைக்குன்றுகள்...
அதன் நடுவே ஓடும் நதியாக அழகு மூக்கு...
சேருமிடம் அழகான நன்னீர்க் கடல் செவ்வாய்..
அதன் உள்ளே சிப்பிமுத்துக்களாய் பற்கள் ...
அதை முக்குளித்து எடுக்க நினைக்கும்இக்கயவனை உன் இதயத்தில் சிறை பிடி பெண்ணே!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே