உன் இதயத்தில் சிறை பிடி பெண்ணே

வானவில் வடிவில் கூந்தல்...
அதன் கீழே வான்போன்ற நெற்றி...
இரு புருவமும் மலைக்குன்றுகள்...
அதன் நடுவே ஓடும் நதியாக அழகு மூக்கு...
சேருமிடம் அழகான நன்னீர்க் கடல் செவ்வாய்..
அதன் உள்ளே சிப்பிமுத்துக்களாய் பற்கள் ...
அதை முக்குளித்து எடுக்க நினைக்கும்

இக்கயவனை உன் இதயத்தில் சிறை பிடி பெண்ணே!

எழுதியவர் : மனுநீதி (30-Jun-22, 5:07 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 196

மேலே