கோவை நகர்க்குமரியோ
நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தம் விதவிதமாய்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ
---இரு விகற்ப இன்னிசை வெண்பா
நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தமும் --மாலைப்பூம்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ
--இரு விகற்ப நேரிசை வெண்பா