அருமையான காதல் கவிதை
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡
அன்பே!
மறுஜென்மத்தில்
நான்
மனிதனானால் மட்டுமல்ல....
நான் தென்றல் ஆனாலும்
உன் ஜன்னல் தேடி
வருவேன்...
நான் மழையானாளும்
உன் வாசல் தேடி வருவேன்...
நான் இசையானாலும்
உன் செவித் தேடி வருவேன்...
நான் பாதை ஆனாலும்
உன் பாதம் தேடி வருவேன்...
நான் மலரானாலும்
உன் கூந்தல் தேடி வருவேன்...
நான் நிழல் ஆனாலும்
உன் நிஜம் தேடி வருவேன்...
நான் காற்றாலும்
உன் சுவாசம் தேடி வருவேன்...
நான் கனியானாலும்
உன் இதழ் தேடி வருவேன்...
நான் மொழியானாலும்
உன் குரல் தேடி வருவேன்...
நான் மண்ணானாலும் உன்
காலடி சுவடுகள் தேடி வருவேன்...
நான் கல்லானாலும்
நீ போகும் ஆலயம் தேடி வருவேன்...
இந்த ஜென்மத்தில்
மனிதன் ஆனதால்
உனக்கு
வாழ்க்கை துணையாக வருகிறேன்...
*கவிதை ரசிகன் குமரேசன்*
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡