இதுதான் காதலோ
என் இதயம் துடிக்கும் சத்தம், பேரிடி போல...
மலர்கள் மலர்வது, மாபெரும் போர்க்களம் போல...
சிற்றோடைத் தண்ணீர் சலனம், சீறி வரும் ஆழிப்பேரலை போல...
சிறுவண்டு ஓட்டம், சீறிப் பொங்கும் எரிமலை போல...
நீயென் கன்னத்தில் அறைந்த தடம், மருதாணி சிவப்பாக...
இருந்தும் என் நெஞ்சம் இப்போதும் உன் முகம் தேடுவதுதான் காதலோ?!