பன்னீர் மலரினைப்போல் வெண்ணிற மேனியளே
பன்னீர் மலரினைப்போல் வெண்ணிற மேனியளே
மின்னலை வீசிடும் நீல விழியழகே
கன்னக் கதுப்பினில் காதல் குழிவினளே
சின்னயிடைச் சித்திர மே
பன்னீர் மலரினைப்போல் வெண்ணிற மேனியளே
மின்னலை வீசிடும் பூவிழியே -- பொன்னிற
கன்னக் கதுப்பினில் காதல் குழிவினளே
சின்னயிடைச் சித்திர மே
பன்னீர் மலரினைப்போல் வெண்ணிற மேனியளே
மின்னலை வீசிடும் பூவிழியே -- பொன்னிற
கன்னக் கதுப்பில்கா தல்குழிவே -- என்னினிய
சின்னயிடைச் சித்திர மே
----பா மூன்று வடிவில்