தமிழ் காதலன் யான் சரத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் காதலன் யான் சரத் |
இடம் | : வல்லம் கிராமம், கரூர் |
பிறந்த தேதி | : 14-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 9 |
துவண்டு போகாத, தோல்வி வரம் பெற்றவன்..
வீதி நின்று,
விழியசைத்து - காலம்
விரையம் செய்து,
விழிகள் பேசிட - காதலில்
விரல்கள் கோர்த்திட,
வினாக்களின் நடுவே - பாவை,
விளையாட்டாய் என்னை,
விட்டுச் சென்றிட - பாவம் நான்,
விரல்களில் பேனாவுடன்,
விளையாத தாடியுடன் - உயிரற்ற,
விதியுடன்,
விலையற்ற உடலுடன் - காலத்தின்,
விபரீத ஆசையினால்,
வீணாகிப் போனேனே! 🤦♂
கண்ணசைத்து,
கவி பாடி,
கைக் கோர்த்து,
கதை பேசி,
மலர் கொடுத்து,
மனமுடித்து,
இடம் மறந்து,
இதழ் பதித்து,
முழு மனதாய்,
முதன் முதலாய்,
முதல் காதல் கொண்டோமே - பின்,
பிறர் பேச்சால் அறிவற்று,
பிற்போக்கில் எனை மறந்து,
மண மடல் கொடுத்து,
என் மனமுடைத்தாய்,
எல்லாம் நீ என்று உன்னை இதயத்தில் நான் பதிக்க,
வேண்டாம் நீ என்று என் இதயம் கிழித்து நீ பறக்க,
காகிதமாய் கசங்கி, கல்லறையில் வீழ்ந்தேனடி!
கண்ணருகில் கவி பேசியவள்,
கல்லறையில் மலர்
வீசுகிறாள்!
அன்று காரணம் கேட்டு சண்டையிட்டவள்,
இன்று காரணங்கள் சொல்லி
கண்ணீர் வடிக்கின்றாள்,
கதாநாயகி!
கருவறை சுமந்த
தாயை மறந்து,
காதல் செய்து,
காயப்பட்டு,
கல்லறையில் நான்
உறங்க,
துளி கண்ணீருடன்
காதலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறாள்
கல் நெஞ்சுகாரி!
🤦♂