கல்லறையில் வீழ்ந்தேனடி
கண்ணசைத்து,
கவி பாடி,
கைக் கோர்த்து,
கதை பேசி,
மலர் கொடுத்து,
மனமுடித்து,
இடம் மறந்து,
இதழ் பதித்து,
முழு மனதாய்,
முதன் முதலாய்,
முதல் காதல் கொண்டோமே - பின்,
பிறர் பேச்சால் அறிவற்று,
பிற்போக்கில் எனை மறந்து,
மண மடல் கொடுத்து,
என் மனமுடைத்தாய்,
எல்லாம் நீ என்று உன்னை இதயத்தில் நான் பதிக்க,
வேண்டாம் நீ என்று என் இதயம் கிழித்து நீ பறக்க,
காகிதமாய் கசங்கி, கல்லறையில் வீழ்ந்தேனடி!