சிக சபரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிக சபரி |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 13-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 188 |
புள்ளி | : 16 |
வானில் ஒரு நிலா காயாக இருக்கிறது.
அதனை சுற்றி விண்மீன்கள் ஆர்வத்துடன்.
நிலாக்காய் பௌர்ணமியில் பழுத்தது.
விண்மீன்களுக்கு பழத்தின் வாசம் வந்ததென்னவோ.,
பழுத்த நிலாவை சுவைக்க ஆரம்பித்தன.
அமாவாசையில் பழம் இல்லை.
அதனை சுற்றி விண்மீன்கள் ஏப்பத்துடன்(ஏக்கத்துடன்).
ஓட்டு போட விடுமுறை அளித்தால், சிலர் சுற்றுலா செல்கின்றனர்.
சிலர் ஓட்டு போடுவதில்லை.
சிலர் பணம் வாங்கி தங்கள் ஓட்டை விற்கின்றனர்.
மனம் சொல்வதை கேட்பதில்லை போலும், பணம் உள்ளதை அறிந்து.
பணம் பத்தும் செய்யும் என்பார்களே.. உண்மை தான்.
பத்து விரல்களில் ஒன்றாக ஆள் காட்டி இருப்பதால் விரல் பணத்திற்கு இணங்குகின்றது போலும்.
கோவில் யானை பணம் வாங்கித் தான் ஆசிர்வதிக்கும்.குறை யானையிடம் இல்லை. யானைப்பாகனிடம். யானைக்கு பகுத்தறிய தெரியாது.
மனிதனும் யானை செய்கையெய் புரிவதென்ன.
இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து கோர்க்கிறேன் கவிதைகளாக.
படித்தால் செவிகள் அறியும்.
வெற்றுக் காகிதத்தில் தீட்டுகின்றேன் ஓவியமாக.
காணாதவர்கள் கண்டால்,விழிகள் அறியும்.
பல முறை சிந்திக்கலாம், எது வேண்டும் எது வேண்டாம் என்பதற்கு.
ஒரு முறை தான் முடிவெடுக்க வேண்டும், இது வேண்டும் இது வேண்டாம் என்பதற்கு.
சிந்திப்பது வகுத்தறிய.
முடிவெடுப்பது பகுத்தறிய.