விண்மீன்களும்-நிலவும்
வானில் ஒரு நிலா காயாக இருக்கிறது.
அதனை சுற்றி விண்மீன்கள் ஆர்வத்துடன்.
நிலாக்காய் பௌர்ணமியில் பழுத்தது.
விண்மீன்களுக்கு பழத்தின் வாசம் வந்ததென்னவோ.,
பழுத்த நிலாவை சுவைக்க ஆரம்பித்தன.
அமாவாசையில் பழம் இல்லை.
அதனை சுற்றி விண்மீன்கள் ஏப்பத்துடன்(ஏக்கத்துடன்).