இளமாறன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளமாறன்
இடம்:  திருமங்கலம்-மதுரை
பிறந்த தேதி :  15-Aug-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2015
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  2

என் படைப்புகள்
இளமாறன் செய்திகள்
இளமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2015 12:40 pm

முத்துப்பல் காட்டி
ஏழுலகும் வியக்கும் வண்ணம்
மெல்ல அசைந்து நின்றாய்
என்னை நீ கொள்ளை கொண்டாய் !

கண்சிமிட்டி எனை அழைக்க
மண்தனில் நான் குதூகலிக்க
வந்தது மழைக்காலம்
நமக்கது சிறைக்காலம்

சென்றதுவே கார்காலம்
வந்ததுவே இராக்காலம்
மீண்டும் கண் சிமிட்டி
வந்தணைக்க நீ அழைக்க

உன் பேதமைப் பெண்குணம் கண்டு
சிந்தித்தவனாய்ச் சில நாழி கழித்து
உன் அறியாமை தனை நான்
சிரிப்பாய் உதிர்த்திட்டேன்…
சிரிப்பென்ன சிருங்கார மன்னா ?
சிந்தையைத் திறந்து சொல் என்றாய் !

நகைப்புடனே நான் சொன்னேன்
நங்கையே ! நானிருப்பது மண்ணகம்
பங்கயப் பாவாய் நீ இருப்பது விண்ணகம்
கங்கை ஆறெனப் பெருக்கெடுக்கும்
என் கற்பன

மேலும்

இளமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 8:17 pm

என் சிறு பிராயத்தில்
விக்கல் வந்தது…
நினைக்கின்றான் என்னை என்றாய்..!
உன்மேல் சிறுநீர் கழித்தேன்…
பிரியம் மிக அதிகம் என்றாய்..!
காய்ச்சல் வந்தது…
பல் முளைக்கப் போகிறது என்றாய்..!
வயிற்றோட்டம் போனது…
நடக்கப் போகிறான் என்றாய்..!
தும்மல் வந்தது…
ஆயுள் நூறு என்றாய்..!
இப்படி என் கழிவுகளைக் கூட
களித்து ரசித்துப்
புதிய பொருள் சொன்னவன் நீ..!

நாட்காட்டியின் நாட்கள் கிழிந்து
நாட்காட்டிகள் பல மாறிய போது
உன் தந்தையின் வயோதிகம் உனக்கும்
உன் வாலிபம் எனக்கும் வந்திருந்தது.
நான் அலுவலக நாற்காலியில்
அமரும் வேளையில்
நீ சாய்வு நாற்காலிக்கு மாறியிருந்தாய்…!

காலம் உன் வாழ்க்கை அனுபவத்தி

மேலும்

தந்தை மகன் உறவின் உணர்வினையும் ஆதரிசத்தையும் அழகாகச் சொல்லும் உணர்வுப் பூர்வமான கவிதை கடைசி வரிகள் மிகச் சிறப்பு.மனதைத் தொடுகிறது இப்படி தாங்குவோர் அருகி வருவதால்தான் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன மனமுவந்த பாராட்டுக்கள் அன்புடன்,கவின் சாரலன் 20-May-2015 9:36 pm
உங்கள் தகவல் பக்கத்திலிருந்து தெரிந்தது இதுதான் நீங்கள் இந்தத் தளத்தில் பதிக்கும் முதல் கவிதை என்று. இது போன்ற நல்ல கவிதைகள் தளத்தில் பதிய வேண்டும். தொடருங்கள் தோழரே... 20-May-2015 8:14 pm
எந்த ஒரு தகப்பனும் மனதில் சட்டமிட்டு மாட்டிக் கொள்ளக் கூடிய கவிதை ! அருமை என்று ஒற்றை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.. சொல்லவும் வார்த்தைகள் இல்லாமல் போகிற நிலை..வாழ்த்துக்கள்.. தொடருங்கள் தோழரே ... 20-May-2015 8:11 pm
இந்த சிந்தனைக்காகவே உங்களுக்கு முழு மதிப்பெண்கள் ..கவிதையும் நன்றே தொடருங்கள் 20-May-2015 7:56 pm
கருத்துகள்

மேலே