InfantNesan J - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : InfantNesan J |
இடம் | : அறந்தாங்கி |
பிறந்த தேதி | : 11-Nov-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 3 |
சுழலும் உலகம் சுழன்று செல்ல
தேங்கிய நீராய் நூற்றாண்டு பின்னோக்கி
சுழலாத நிழலாய் இவளது உலகம் !
பாசத்துக்கு வேசம் இட்டு - வேசத்திற்கு
பாசம் காட்டும் - அறியா உள்ளம்,
வெகுளி தோற்றம்; இவளது இயற்கை !
நிலையற்ற உலகினிலே - நிலையான இடமாய்
இவளது கோட்டையாய், அடுப்பங்கரை முற்றம்
கண்ணீரோடு சொல்லும் இவளது குரலை !
பசிக்கு உண்டாலும், ருசிக்கு உண்டாலும்,
எஞ்சிய உணவே இவள் தட்டில் ;
மிஞ்சிய பசியோ இவளது வயிற்றில் !
பூட்டிய சிறையுள் வாட்டிய மீனாய் ;
கட்டிய கோட்டையுள் மாட்டிய மானாய்;
வருடங்கள் கழிக்கின்றன இவளது நாட்கள் !
நாட்டை ஆண்டாலும், வீட்டுக்குள் அடிமை;
ஊரை காத்தாலும்,உருக்கும் வேதன
இறக்கைகள் இல்லா தேவதையாய்
புவியில் வாழும் கலைமகளாய்
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
பாசத்தை அரணாக்கி பத்து
திங்கள் சுமந்தாய்- தொப்புள்கொடி
உருவாக்கி உயிரையும் காத்தாய்
உதிரத்தை பாலாக்கி பசிதனை
போக்கினாய்- ஊர்கண் படாமல்
பொத்தி என்னை வளர்த்தாய்
உயிர் கொடுத்த கதிரவனாய்
இருள் போக்கிட்ட சந்திரனாய்
வாழ்வில் ஒளியை கொடுத்தவளே!
இறைவனும் பொறாமை கொள்கிறான்
என்னிடத்தில் - தேவனும் உறவாட
விரும்பி வருகிறான் நம்மிடத்தில்
விடியும் பொழுதினில் இன்பம்
பெருக்கி- தங்கும் இடத்தை
சுற்றி எங்கும் நிரப்பி
ஆசை மொழியாலும் ஆறுதல்
வார்த்தையாலும் - உறவுகள் எங்கும்
தழுவி அன்பினாலே இணைக்கின்றாய
கடலும் பெருங்கடலும் சூழ்ந்த தெற்கும்..
இமயமும் பாலையும் அரணாய் வடக்கும்..
வற்றாத நதியாய் வளங்கொடுக்கும் கங்கையும்..
பூவிரியும் சோலையினுள் புகுந்தோடும் காவிரியும்..
ஆதி பகவன் பயிற்றுவித்த தமிழும்..
தோன்றிச் சிறந்த ஏனைய மொழிகளும்..
எனச் சொல்லில் அடங்கா - இயற்கை
அன்னையின் வளங்கள் மிகுந்தது எம்நாடு!
மகாபாரதம் இயற்றிய வேத வியாசரும்..
கம்பராமாயணம் வடித்து தந்ந கம்பரும்..
புதுக்கவிதை வித்திட்ட மகாகவியும் - இலக்கிய
இமயம் தாகூரும் - என கல்வியிலும் கலையிலும்
முத்தெடுத்த செல்வங்கள் பிறந்தது எம்நாடே!
தன்னம்பிக்கையின் சிகரம் சத்திரபதி சிவாஜி..
பரங்கியரை பதம் பார்த்த கட்டபொம்மன்..
கப்பல