எனது இந்தியா
கடலும் பெருங்கடலும் சூழ்ந்த தெற்கும்..
இமயமும் பாலையும் அரணாய் வடக்கும்..
வற்றாத நதியாய் வளங்கொடுக்கும் கங்கையும்..
பூவிரியும் சோலையினுள் புகுந்தோடும் காவிரியும்..
ஆதி பகவன் பயிற்றுவித்த தமிழும்..
தோன்றிச் சிறந்த ஏனைய மொழிகளும்..
எனச் சொல்லில் அடங்கா - இயற்கை
அன்னையின் வளங்கள் மிகுந்தது எம்நாடு!
மகாபாரதம் இயற்றிய வேத வியாசரும்..
கம்பராமாயணம் வடித்து தந்ந கம்பரும்..
புதுக்கவிதை வித்திட்ட மகாகவியும் - இலக்கிய
இமயம் தாகூரும் - என கல்வியிலும் கலையிலும்
முத்தெடுத்த செல்வங்கள் பிறந்தது எம்நாடே!
தன்னம்பிக்கையின் சிகரம் சத்திரபதி சிவாஜி..
பரங்கியரை பதம் பார்த்த கட்டபொம்மன்..
கப்பல் ஓட்டி கால்தடம் பதித்த வா.வு.சி..
போர்முனையில் தாக்கிட்ட நேதாஜி- போன்ற
அஞ்சா நெஞ்சங்கள் பிறந்ததும் எம்நாடே!
மூவர்ணக் கொடியுடனும் - வந்தாரை வாழ
வைக்கும் புகழுடனும் - புவிதனில் தனிச்
சிறப்புடன் விளங்கும் நாடே எமது
இந்தியா! - மறுபிறவி ஒன்று உண்டெனில்
இந்தியனாய் பிறப்பேன் - அதன் புகழ்
எட்டுதிசையும் மகரந்த துகளென பரப்பிட...