கார்த்திகேசன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/fluox_23340.png)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திகேசன் |
இடம் | : Karaikal |
பிறந்த தேதி | : 22-Aug-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 4 |
அத்தாச்சி வீட்டு
படி வழுக்கிய
சுளுக்கு வழிக்கவென
மூன்றாவது தெருவிலிருந்து
செண்பகவள்ளி வருவாள்
விளையாடுகையில்
குப்புற விழுந்து
வீங்கிய மண்டைக்கு
பத்து போட
மில் கார அத்தை
மஞ்சள் அரைத்து
கொண்டு வருவாள்
நாவற் மரத்தில்
தலை கீழ் தொங்கி
ஏறிய குடலை இறக்க
ராசாம்பாள் ஆத்தா
தொப்புள் சுற்றுவாள்
அம்மை போட்டு
வாட்டுகையில்
அலாரம் ஏதும் வைக்காமல்
மணிக்கு ஒரு முறை
அம்மா எழுந்து
கஞ்சி கொடுப்பாள்
மல்டி ஸ்பெசாலிட்டி
ஆஸ்பத்திரியில்
சாதாரண ஜுரத்திற்கு
கேஸ் ஹிஸ்டரி
எழுதி கொடுத்து
முன்னூறு ரூபாய்
வாங்கிக் கொண்ட
யுவதியின்
பற்பசைச் சிரிப்பு
வினோதமாய்
படவில்லை எனக்கு.
சுழலும் மின்விசிறியின்
அசுர வேகத்தில்
சிக்கித் தவிக்கிறது
இரவுத் துணைக்கென
கட்டிலின் பிடியில்
குழந்தை கட்டி வைத்த
ஒரு பச்சை பலூன்
அதன் ஒற்றை நூலில்
அதன் ஒவ்வொரு
படபடப்பிலும்
பதைக்கிறது
நம் மனம்
தேர்ந்த ஞானிபோல்
உணர்ந்து
அமைதியாய் உறங்குகிறது
குழந்தை
சூட்சமம் நூலில் இல்லை.
இழுவைக் கதவில்
மங்கிவிட்ட
கூட்டல் குறியீட்டுக்கு
மறு வண்ணம் தீட்டுகிறார்கள்.
ஒழுகிச் சிதறிய
சிவப்பு வண்ணத்
திட்டுக்களை
விரைந்து துடைக்கிறான்
உதவிக்காரச் சிறுவன்.
அசையாது படுத்துறங்கும்
கருப்பு நாயொன்று
அவ்வப்போது
பார்த்துக் குரைக்கிறது
இவர்களை.
அரவமற்ற ஒரு
ஞாயிறின் மதியத்தில்
இழுத்திறக்கிய
கதவின் பின்னால்
மருந்து வாசனை
சுவாசம் நிரப்ப
மருந்து கடைக்காரர்
கடைக்குள்ளேயே
தூக்கிட்டுக்கொண்டு
இன்றோடு
பதினைந்து நாட்களாகிறது.
வினோதம்தான்
மரணிக்க
அத்தனை விசேஷ
மருந்துகள் இருந்தும்
மருந்துக் கடைக்காரர்
தூக்குக் கயிறைத்
தேர்ந்தெடுத்ததும்
மருந்துக்கடை
மீண்டும்
மர
ஈன்றெடுத்து என்
கை தருகையில்
மூடிய உன்
விரல்கள் விலக்கி
உள்ளங்கை முத்தமிடுகையில்
பிரபஞ்சம் வென்ற
களிப்பெனக்கு
இன்று
விரல்கள் நீட்டி
இலகுவாய் பாவித்த
துப்பாக்கி கொண்டு
'அப்பா துமீல்' என
நீ சுடுவதுபோல் சுடுவதும்
நான் சாவதுபோல் சாவதும்
உன்னால் செத்து செத்தே
தினம் பிழைக்கிறேன் போ!