உறங்கும் ஞானி

சுழலும் மின்விசிறியின்
அசுர வேகத்தில்
சிக்கித் தவிக்கிறது
இரவுத் துணைக்கென
கட்டிலின் பிடியில்
குழந்தை கட்டி வைத்த
ஒரு பச்சை பலூன்
அதன் ஒற்றை நூலில்

அதன் ஒவ்வொரு
படபடப்பிலும்
பதைக்கிறது
நம் மனம்

தேர்ந்த ஞானிபோல்
உணர்ந்து
அமைதியாய் உறங்குகிறது
குழந்தை

சூட்சமம் நூலில் இல்லை.

எழுதியவர் : (6-Sep-15, 10:14 pm)
சேர்த்தது : கார்த்திகேசன்
Tanglish : urankum njaani
பார்வை : 82

மேலே