M Dilshath Banu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : M Dilshath Banu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 4 |
அன்று கண்டப் போது
எங்களுக்குள் பந்தமில்லை,
இன்று நண்பனை போல்
ஒரு சொந்தமில்லை..!
நான் என்ற ஒருமையில்,
எங்கள் நட்பு நாம் என்று இனைந்த பன்மை..!
ஏழேழு ஜென்மம் எடுப்பினும்
காண முடியாது இப்படி ஒரு நண்பனை..!
நண்பன் என் பக்கமாய் நிற்க,
வலி எல்லாம் தூரமாய்,
கண்ட கனவெல்லாம் கை வண்ணமாய்..!
ஊன் இன்றி உயிர் இல்லை,
நண்பன் இன்றி
என் வாழ்வில் சுவை இல்லை..!
பகலுக்கு சூரியன்,
இரவுக்கு சந்திரன்,
என் வாழ்க்கைக்கு அவள்..!
மாறி செல்லும்
காலங்கள்,
மறைந்து செல்லும்
புன்னகைகள்,
மாறுபட்ட மனிதர்கள்,
மன்னிக்காத உள்ளங்கள்,
மிரட்டும் சுயநலங்கள்,
மீண்டும் ஏமாற்றங்கள்,
அனைத்தும் இருக்க காரணம்,
மாற்றத்தை தாங்காத
இதயங்கள்..!
-- மு.தில்ஷாத் பானு
உந்தன் பிரிவு அழகாக
எழுதிய கவிதையே
எந்தன் தனிமை..!
--
மு.தில்ஷாத் பானு