நட்பு

அன்று கண்டப் போது
எங்களுக்குள் பந்தமில்லை,
இன்று நண்பனை போல்
ஒரு சொந்தமில்லை..!
நான் என்ற ஒருமையில்,
எங்கள் நட்பு நாம் என்று இனைந்த பன்மை..!
ஏழேழு ஜென்மம் எடுப்பினும்
காண முடியாது இப்படி ஒரு நண்பனை..!
நண்பன் என் பக்கமாய் நிற்க,
வலி எல்லாம் தூரமாய்,
கண்ட கனவெல்லாம் கை வண்ணமாய்..!
ஊன் இன்றி உயிர் இல்லை,
நண்பன் இன்றி
என் வாழ்வில் சுவை இல்லை..!

எழுதியவர் : மு.தில்ஷாத் பானு (21-Oct-17, 5:34 pm)
Tanglish : natpu
பார்வை : 845

மேலே