மீரா பரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மீரா பரா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Dec-2021
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  2

என் படைப்புகள்
மீரா பரா செய்திகள்
மீரா பரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2021 1:56 am

தண்ணொளி தனைவீசும் வெண்ணிலவின் இரவில்
புன்னகையில் பூத்தமுகம் பொலிவுடன் விகசிக்க
பஞ்சணையாம் மேகமிடை ரஞ்சகமாய் எழுந்து
என் நெஞ்சதனை கொள்ளைகொண்ட நங்கை இவள் யாரோ?

மென்பட்டு ஆடையது வெண்குடையாய் விரிய
விண்ணதனின் விதானமதில் மின்னல்போல் தோன்றி
கொஞ்சும்கிள்ளை மொழிபேசும் அஞ்சனவிழி அழகி
அவள் துஞ்சுகுழல் அலையில் உள்ளம் உருகியது ஏனோ?

சென்னியதில் செங்காந்தள் பூவிதழ்கள் சிரிக்கும்
வண்ணமயில் பெண்ணழகில் என்வாலிபத்தை தொலைத்து
மஞ்சுடை மங்கையவள் பொன்நிகர்த்த உடலை
நான் நெஞ்சணைத்து அன்புசெய்ய நேரம் எப்போ கூடும்?

கண்ணதனால் கணையெறியும் கன்னியவள் என்கனவில்
எண்ணமெல்லாம் அனல்வீசும் நினைவுகளின் நெருப்பி

மேலும்

மீரா பரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2021 1:29 am

மாலை மலர்ந்ததடி கண்ணம்மா
மனமோ தவித்ததடி...
மதியும் எழுந்ததடி கண்ணம்மா
மயக்கம் பிறந்ததடி...

தென்றல் தவழ்ந்ததடி கண்ணம்மா
தேகம் கொதித்ததடி...
திங்கள் ஒளியதடி கண்ணம்மா
தீயாய் தகித்ததடி...

அண்டவெளியதடி கண்ணம்மா
அந்நிலவில் குளித்ததடி...
அகத்தில் அலர்ந்தாயடி கண்ணம்மா
அழகால் அணைத்தாயடி...

முகில்கள் நகர்ந்ததடி கண்ணம்மா
முகமதி தெரிந்ததடி...
விண்மீன் ஜொலித்தடி கண்ணம்மா
விழியின் ஒளிதானடி...

அருவிக் கரையிலடி கண்ணம்மா
அமர்ந்து இருந்தேனடி...
ஆடும் அலைகளடி கண்ணம்மா
அன்பேயுன் நடைதானடி...

நீரின் பரப்பிலடி கண்ணம்மா
நின்முகம் கண்டேனடி...
நெஞ்சக் கடலிலடி
நீந்திக் களித்தாயடி...

மேலும்

கருத்துகள்

மேலே