Muthukumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muthukumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Nov-2018
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  3

என் படைப்புகள்
Muthukumar செய்திகள்
Muthukumar - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2018 10:24 pm

ஊன் தந்தது இறைவன் என்றாய்
எனது உதிரம் உனதல்லவா!

கல்வி தருவது சரஸ்வதி என்றாய்
எனது மொழி உனதல்லவா!

கண்ணை காப்பது இமை என்றாய்
என்னை காப்பவள் நீயல்லவா!

கேட்பவை கொடுப்பது தெய்வம் என்றாய்
கேட்காமல் கொடுப்பவள் நீயல்லவா!

என்றும் அன்பே சிவம் என்றாய்
அன்பின் வடிவம் நீயல்லவா!

எதிலும் தெய்வம் துணைநிற்கும் என்றாய்
என்நிழலாக வரும்தெய்வம் நீயல்லவா!

கல்லில் தெரிவது கடவுள் என்றாய்
கண்முன் நிற்கும்கடவுள் நீயல்லவா

மேலும்

Muthukumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2018 9:31 am

இளமை பருவம் தந்த மாற்றம்
கன்னிப் பெண்ணின் மீது நாட்டம்

அவளை பார்த்த நொடியில்வந்த மயக்கம்
எனது இதயத்தில் இன்பக் கலக்கம்

என்மனதில் என்றும் அவளது தோற்றம்
இருந்தும் அவள் விழிகள்காண தயக்கம்

அவளது புன்னகை பூத்த பார்வை
எனது நெஞ்சில் வான வேடிக்கை

அவளது மௌனம் கலந்த சோகம்
எனது இதயத்தில் இடி முழக்கம்

குயிலோசை கேட்டேன் அவள் மொழிகளிலே
மயில்நடனம் கண்டேன் அவள் நடையினிலே

முழுநிலவை பார்த்தேன் அவள் முகத்தினிலே
தேவதையை கண்டேன் அவள் வடிவினிலே

சொர்க்கத்தில் வாழ்ந்தேன் அவள் நினைவுகளாலே
நரகமும் கண்டேன் அவளைகாணாத நொடிகளிலே

உள்ளதவிப்பை அவளிடம் சொல்லத் துடித்தேன்
அவள்மன

மேலும்

Muthukumar - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2018 11:44 am

இன்பம் இழந்து தூக்கம் மறந்து
நாயாய் உழைத்து சிக்கனமாய் சேர்த்த பொருளை

அன்பு பொழிந்து தேவை மொழிந்து
சத்தியம் உரைத்து கடனாய் பெற்றது உறவு

நன்றி மறந்து உண்மை மறைத்து
நாணயம் கரைந்து நாடகம் ஆடியது உறவு

உறவை நினைத்து உடமை கொடுத்து
நன்மை செய்து துன்பம் பெற்றது மனது

மேலும்

கருத்துகள்

மேலே