மனித வடிவில் தெய்வம்
ஊன் தந்தது இறைவன் என்றாய்
எனது உதிரம் உனதல்லவா!
கல்வி தருவது சரஸ்வதி என்றாய்
எனது மொழி உனதல்லவா!
கண்ணை காப்பது இமை என்றாய்
என்னை காப்பவள் நீயல்லவா!
கேட்பவை கொடுப்பது தெய்வம் என்றாய்
கேட்காமல் கொடுப்பவள் நீயல்லவா!
என்றும் அன்பே சிவம் என்றாய்
அன்பின் வடிவம் நீயல்லவா!
எதிலும் தெய்வம் துணைநிற்கும் என்றாய்
என்நிழலாக வரும்தெய்வம் நீயல்லவா!
கல்லில் தெரிவது கடவுள் என்றாய்
கண்முன் நிற்கும்கடவுள் நீயல்லவா