நன்மை செய்து துன்பம் பெற்றேன்
இன்பம் இழந்து தூக்கம் மறந்து
நாயாய் உழைத்து சிக்கனமாய் சேர்த்த பொருளை
அன்பு பொழிந்து தேவை மொழிந்து
சத்தியம் உரைத்து கடனாய் பெற்றது உறவு
நன்றி மறந்து உண்மை மறைத்து
நாணயம் கரைந்து நாடகம் ஆடியது உறவு
உறவை நினைத்து உடமை கொடுத்து
நன்மை செய்து துன்பம் பெற்றது மனது