MAY I COME IN SIR

கவிதை கட்டி கவிதை கட்டி
காதலிக்க ஒருத்தியும் வரவில்லை
கால்கட்டு போட்டால்தான் பிள்ளை உருப்படும் என்று
பெண் பார்த்தார்கள் வீட்டில்
தாலிகட்ட கழுத்தை நீட்ட எந்தப் பெண்ணும் முன் வரவில்லை
வேலையில்லாத வெத்து வேட்டை எவள் காதலிப்பாள் ?
எந்த அப்பன் பெண் கொடுப்பான் ?
வீதி வீதி யாய் அலைந்து
அலுவலகம் அலுவலகமாய் படியேறி லி ஃ ப்டில் ஏறி
கதவைத் தட்டி டை சரி செய்துகொண்டு MAY I COME IN SIR என்று
மோகனப் புன்னகை செய்தால் இல்லை என்று கதைவடைக்கிறான் !
தட்டுங்கள் திறக்கப்படும் என்ற கர்த்தரின் வாசகத்தையே பொய்யாக்கிவிட்டார்கள் பாவிகள் !
O JESUS MI LORD என் செய்வேன் மந்தையும் சந்தையும் கறுப்பாகிப் போனதே !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-18, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே