96
இளமை பருவம் தந்த மாற்றம்
கன்னிப் பெண்ணின் மீது நாட்டம்
அவளை பார்த்த நொடியில்வந்த மயக்கம்
எனது இதயத்தில் இன்பக் கலக்கம்
என்மனதில் என்றும் அவளது தோற்றம்
இருந்தும் அவள் விழிகள்காண தயக்கம்
அவளது புன்னகை பூத்த பார்வை
எனது நெஞ்சில் வான வேடிக்கை
அவளது மௌனம் கலந்த சோகம்
எனது இதயத்தில் இடி முழக்கம்
குயிலோசை கேட்டேன் அவள் மொழிகளிலே
மயில்நடனம் கண்டேன் அவள் நடையினிலே
முழுநிலவை பார்த்தேன் அவள் முகத்தினிலே
தேவதையை கண்டேன் அவள் வடிவினிலே
சொர்க்கத்தில் வாழ்ந்தேன் அவள் நினைவுகளாலே
நரகமும் கண்டேன் அவளைகாணாத நொடிகளிலே
உள்ளதவிப்பை அவளிடம் சொல்லத் துடித்தேன்
அவள்மனம் வாடிடக் கூடாதென தவித்தேன்
உணர்வுகளை புதைத்தேன் சொல்வதை தவிர்த்தேன்
நினைவுகளில் நனைந்தே காலத்தை கடந்தேன்
அவள் பாதை அவள்கண்டு சென்றாள்
கனவான என்கோலம் கலைய சென்றாள்
சுகமான நினைவுகளை பரிசாக தந்தாள்
எந்நாளும் நலம்வாழ வாழ்த்திச் சென்றாள்
அவள்போகும் வழிசிறக்க நான் வேண்டினேன்
அவள்தந்த நினைவுகளில் நான் வாழ்கிறேன்