நான் என்ற ஆணவம்

விதி வழியே செல்லும் முட்டாளே!
உன் மதி எங்கே போச்சு?

பலருக்கு புத்திமதி புகட்டிய உன் பேச்சு இன்று என்ன ஆச்சு?

உன்னுடலை விட்டுவிட்டுப் போகத்தான் போகுது ஓர் நாள் உன்னுயிரு

சுவாசக்காற்றை
இழந்த பின்பு
என்னவாகும் உன் உடலு?

சுற்றத்தார் கூடி
உன்னை சுட்டு
எரித்து விட்டுத் தானே
செல்வார் அன்று

அதுவரைக்கும்தான்
நான் என்று திரிய முடியும் - இங்கு!

எவ்வளவுதான் பணமிருந்தாலும்
உன்னுயிரை
மீண்டும் பெற முடியமா - சொல்?

உலக உண்மையை
புரிந்து கொண்டு செல்!

தன்னம்பிக்கை தனல்
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Dec-18, 2:37 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : naan entra AANAVAM
பார்வை : 3270

மேலே