நீர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நீர்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Jul-2019
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  6

என் படைப்புகள்
நீர் செய்திகள்
நீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2019 6:02 am

வானுயரப் பறக்கும் பறவைகளாய் எட்டிப் பிடிக்க முடியா உயரத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியா வண்ணத்தில்
அழகிய நினைவுகளாய் ஆழ்மன ஏக்கங்கள், சட்டென்று வீசும் தென்றலாய் மனதை வருடிச் செல்கின்றன கற்பனைச் சிறகுகள்!

மேலும்

கற்பனை நன்று! கவிதை வரி வடிவில் எழுதலாமே! 10-Jul-2019 8:52 am
நீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 9:21 pm

நிலா வெளிச்சம் போல் குளிர்ந்த ஒளி வீசி அனைவரையும் குளிரச் செய்பவள். பெண் மழலைபிறந்து இவ்வுலகில் அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறி வருவது என்பது மிகப்பெரிய சாதனை கண்ணே!
பிறந்தவுடன் தந்தைக்கு மகளாய், இளவரசியாய் புத்துணர்வு ஊட்டுகிறாள்.
மெல்லிய அவள் சருமம் பூக்களை விட மென்மையாய்!!
அழகாய் சில்லிட வைக்கிறாள். ஆனந்தத்தின் உச்சியை தொட வேறு எதுவும் இல்லை என உணர செய்கிறதுமழலைச் செல்வம் என்பது. துள்ளித் திரியும் மான்க்குட்டியாய் நீ! இவ்வுலகில் உன்னை விட சிறந்த செல்வம் ஏது கண்ணே!

மேலும்

நீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 3:55 pm

வீறுகொள் பெண்ணே!
அடங்கிக் கிடந்தது போதும்....
அநியாயம் காக்க அலைகடலாய் ஓடிவா!ஆத்திரம் கொள்,
அநியாயக் காரர்கள் மீது!
சமுதாயத்தில் திரிந்து கொண்டிருக்கும் தீயவர்களை தீயிட்டுக் கொளுத்தும் தீக்குச்சியாய் நீ வா!
அது பெரும் நெருப்பாகும் போது தான் தெரியும் தீயைத் தொட்டால் சுடும்;ஆனால் பெரும் நெருப்பு எரித்து விடும் என்று!
பார்த்தாலே எரித்து விடும் பெரும் நெருப்பு நீ!
எதற்கும் அஞ்சாதே; வீறுகொள் பெண்ணே!!

மேலும்

நீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 6:05 am

ரசிக்கிறேன் வியக்கிறேன்!
ஒவ்வொரு மணித்துளியும் உன்னை......
விக்கித்து நிற்கிறேன்!!
உன் வாயில் இருந்து வார்த்தைகள், முத்துச் சிதறல்களாய் வெளி வருகையில்.......
ஆம்!உன் வெட்கத்தால் என்னை, அடைத்துவிட்டாய் மனச்சிறையில்!!!
உன் வேல்விழிப் பார்வை போதுமே,.....
காலமெல்லாம் வீழ்ந்து கிடப்பேன் உந்தன் மனச்சிறையில்!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே