பெண் குழந்தை
நிலா வெளிச்சம் போல் குளிர்ந்த ஒளி வீசி அனைவரையும் குளிரச் செய்பவள். பெண் மழலைபிறந்து இவ்வுலகில் அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேறி வருவது என்பது மிகப்பெரிய சாதனை கண்ணே!
பிறந்தவுடன் தந்தைக்கு மகளாய், இளவரசியாய் புத்துணர்வு ஊட்டுகிறாள்.
மெல்லிய அவள் சருமம் பூக்களை விட மென்மையாய்!!
அழகாய் சில்லிட வைக்கிறாள். ஆனந்தத்தின் உச்சியை தொட வேறு எதுவும் இல்லை என உணர செய்கிறதுமழலைச் செல்வம் என்பது. துள்ளித் திரியும் மான்க்குட்டியாய் நீ! இவ்வுலகில் உன்னை விட சிறந்த செல்வம் ஏது கண்ணே!