கடும் வெப்பம் கண்டு

மனிதா மனிதா மகத்துவ மனிதா
மனதின் மகத்துவம் அறிந்தது உண்டா

எதையும் வெல்லும் திறன் உனக்கு உண்டு
எவ்வாறு என்று உன் மனதைத் தூண்டு

பஞ்சை நூலாய் பண்ணியவன் மனிதன்
நெஞ்சில் எண்ணம் தோன்றியதனாலே

காற்றை ஆக்க காற்றாடி செய்தான்
கடும் வெப்பம் கண்டு உடல் சோர்ந்ததாலே

பாதம் தேய்ந்து உடல் பலமிழந்ததாலே
பாதுகை ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டான்

பல்வகை உழைப்பை செய்ய முடியாதவனே
பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்துக் கொடுத்தான்

நீரினில் பயணிக்க நினைத்தவன் மனமே
நாவாய் ஒன்றை கடலில் ஓட்டியது தினமே

பலமான மனதைப் பக்குவப் படுத்தி
வளமான வாழ்வை வாழ்ந்திடப் பழகு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jul-19, 8:50 am)
Tanglish : katum veppam kandu
பார்வை : 77

மேலே