மை எனப்படுவது

வாழ்வெனப்படுவது சுயம் தனில் வழாமை!
துணிவெனப்படுவது துயரினில் வீழாமை!
பெரிதெனப்படுவது வறுமையில் கெடாமை!
அறிவெனப்படுவது தீநட்பு கூடாமை!
பணிவெனப்படுவது சிரங்கணம் ஏறாமை!
இனிதெனப்படுவது வன்மொழி கூறாமை!
அன்பெனப்படுவது நொடிஉளம் நீங்காமை!
உயிரெனப்படுவது அறநெறி மாறாமை!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (10-Jul-19, 11:39 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 70

மேலே