வரிக்குதிரை வரி

கிராமத்தில் திருவிழாவிற்காக விதிக்கும்
அடுப்பு வரி, நிலத்து வரி, மரத்துவரி
மாநில மத்திய அரசுகள் விதிக்கும்
தண்ணீர் வரி, வீட்டு வரி, கடை வரி, மருந்து வரி
தலையில் கவசம் இல்லையெனில் தண்ட வரி
குறு சாலை வரி, நெடுஞ்சாலை வரி
கேளிக்கை வரி, தங்கும் விடுதிக்கு வரி
வருமானத்துக்கு வரி, வாங்கும் பொருளுக்கு வரி
உண்ணும் உணவுக்கு வரி, உபரியான பல வரி
மண்ணை பதிவதற்கு வரி, மாளிகை கட்டவரி
கோயில் சென்று வாகனம் விட்டால் வரிசை வரி
பணத்தை சேமித்து பாதுகாத்தால் அதற்கு வரி
எரிவாயு உருளைக்கு வரி, வாகன எண்ணெய்க்கு வரி
தனியார் பள்ளியில் செலுத்தும் கட்டணத்துக்கு வரி
பேருந்தில் வரி, தொடர் வண்டியில் வரி
துணிக்கு வரி வீட்டில் தூலத்துக்கு வரி
பொது வெளியில் உள்ள கழிப்பிடத்தினுள் வரி
நீதிமன்றம் சென்றால் முறையிடல் வரி
அலைபேசிக்கு வரி தொலைபேசிக்கு வரி
என பல வரி செலுத்தினும் பண்பட்ட அரசால்
பயன் என்பது மக்களுக்கு கானல் நீரே - அரசு
ஊழியரின் கடமையை செய்திட வைக்க
கையூட்டு என்பது தனி வகை கலையே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jul-19, 8:47 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : varikuthirai vari
பார்வை : 26

மேலே