செந்தூரின் கடலலைகள்

எண்சீர்ச் சந்தவிருத்தம் ...!!!

செந்தூரின் கடலலைகள் கவினழகாய்ப் பாடும்
தென்றலுடன் விளையாடிக் கரைமுட்டிப் போகும் !
மந்திரத்தை ஓயாமல் ஒலித்தபடி ஆடும்
வண்ணமயில் தானாடக் கண்டவுடன் பூக்கும் !
கந்தனவன் எழிலுருவைக் காணவரம் கேட்கும்
கரையோரம் அன்புடனே நுரைமலரைத் தூவும் !
வந்தோரை வரவேற்கப் பொங்கியெழும் நித்தம்
மகிழ்ச்சியொடு கால்வருடித் தணிவிக்கும் பித்தம் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Jul-19, 11:52 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 8
மேலே