வீறுகொள் பெண்ணே
வீறுகொள் பெண்ணே!
அடங்கிக் கிடந்தது போதும்....
அநியாயம் காக்க அலைகடலாய் ஓடிவா!ஆத்திரம் கொள்,
அநியாயக் காரர்கள் மீது!
சமுதாயத்தில் திரிந்து கொண்டிருக்கும் தீயவர்களை தீயிட்டுக் கொளுத்தும் தீக்குச்சியாய் நீ வா!
அது பெரும் நெருப்பாகும் போது தான் தெரியும் தீயைத் தொட்டால் சுடும்;ஆனால் பெரும் நெருப்பு எரித்து விடும் என்று!
பார்த்தாலே எரித்து விடும் பெரும் நெருப்பு நீ!
எதற்கும் அஞ்சாதே; வீறுகொள் பெண்ணே!!