குரல் ஓசை
வண்ண விளக்குகள் எரியும்
எண்ணப்படி மங்கயர்களும்
ஆண்களோடு சேர்ந்தே
ஆடுவார்கள் கால்கள்
நில்லாமல் தள்ளாடும் போதையில்
இரவு நேர விடுதியிலே.....////
ஒட்டி ஒரசி முட்டி மோதி
துள்ளிக் குதித்து
தள்ளி வீழ்த்தி
கட்டிப் பிடித்து தொட்டு இழுத்து
அள்ளி அணைத்து ஆடுவார்கள்....///
தொட்டுக்கவோ கட்டிக்கவோ
உரிமை இல்லாத ஆணோடும்
இணைந்தே ஆடிடுவாள்
மயக்க நிலையிலே ....///
அரை குறை ஆடையும்
அரை குறை மொழியும்
அதிகமாகவே தென்படும்
வந்து விழும் கண்ணிலும்
காதிலும் அந்த வேளையிலே .....///
உள்ளாச வாழ்க்கை
நல்லாவே இருக்கும்
எல்லை மீறியதும்
பெண்மை வாழ்வோ
தெருவிலே பறக்கும்
பிள்ளையது பாவம் குப்பையிலே
குரல் ஓசை கொடுக்கும்....////