நித்திரை கலைந்திட நீல விழிதிறக்க

புத்தகத்தின் அட்டைபோல் புன்னகை செவ்விதழில்
சித்திரத்தின் தூரிகை போலவுன் விற்புருவம்
நித்திரைக லைந்திட நீல விழிதிறக்க
முத்தமிட் டேன்இமை மீது

--ஒரு விகற்ப இன்னிசை வெண்பா


புத்தகத்தின் அட்டைபோல் புன்னகை செவ்விதழில்
சித்திரத்தின் தூரிகை போல்புருவம் -- சத்தமின்றி
நித்திரைக லைந்திட நீல விழிதிறக்க
முத்தமிட் டேன்இமை மீது

--ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-24, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே