பூவின் இனமோநீ புன்னகை பூப்பதில்
தோளில் புரண்டிடும் கூந்தலில் கார்முகிலோ
வாளின் முனையை விழியில் வடித்தவன்
தேவசிற்பி யோஉந்தன் தேகம் புதுநிலவோ
பூவின் இனமோநீ புன்னகை பூப்பதில்வான்
தேவதையாய் வாழ்வில்வந் தாய்
--- பல விகற்ப அல்லது இருவிகற்ப பஃறொடை வெண்பா
அடி எதுகை --தோளி வாளி --ஒரு விகற்பம் தேவ பூவி தேவ --இன்னொரு விகற்பம்
1 3 ஆம் சீரில் ---பொழிப்பு மோனை --தோ கூ இனமோனை வா வி பூ பு தே தா --அதே எழுத்து அல்லது அதன் வர்க்க மோனை