நீயும் ஒரு சித்தன்தான்

நீயும் ஒரு சித்தன்தான்.
11 / 12 / 2024

ஜடா முடி தரித்து
ஆசைகள் தனை அடக்கி
அவயங்கள் தனை வருத்தி
அடர்ந்த வனம் அணுகி
கண் மூடி செவி மூடி
வாய் மூடி
பேச்சடக்கி மூச்சடக்கி
பசியடக்கி ருசியடக்கி
கடுந்தவம் செய்து
கற்ற பரகாயா பிரவேசம்
நாளும் செய்கின்ற மனிதா..
நீயும் யோகித்தான்
நீயும் சித்தன்தான்.
உறக்கத்தில் தற்காலிக
மரணத்தில்
உன் உடலை விட்டு
நீ பிரிந்து
வேறோர் உலகத்தில்
வேறோர் உடலில்
நீ புகுந்து
மேலோகம் பூலோகம்
பாதாளம் எல்லாம் சுற்றி
மீண்டும் உடல் புகும்
கூடு விட்டு கூடு பாயும்
வித்தை கற்ற
நீயும் ஒரு சித்தன்தான்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (11-Dec-24, 9:31 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

மேலே