வாழ்வின் எல்லையே

வாழ்வின் எல்லையே...!
10 / 12 / 2024
குருடனாய் நானும் பிறந்திருந்தால் - நடக்கும்
கூத்துகள் யாவும் காணாதிருந்தி ருப்பேன்.
செவிடனாய் நானும் பிறந்திருந்தால் - பொய்
கதைகளை எல்லாம் கேட்க்காதி ருந்திருப்பேன்.
ஊமையாய் நானும் பிறந்திருந்தால் - மற்றவர்
குறைகள் கூறி பிதற்றாமல் இருந்திருப்பேன்.
முடவனாய் நானும் பிறந்திருந்தால் - கையூட்டு
கருப்பு பணம்தனை வாங்காதி ருந்திருப்பேன்.
நொண்டியாய் நானும் பிறந்திருந்தால் - இப்பாவ
பூமியில் என்தடம் பதிக்காதி ருந்திருப்பேன்.
நலமாய் பிறந்து வந்ததன் பயனை
நாளும் அனுபவித்து சித்திரவதைக் குள்ளாகிறேன்.
ஒட்டவும் முடியவில்லை... ஓடிஒளியவும் முடியவில்லை
வெட்டவும் முடியவில்லை...வெற்றிகொள்ளவும் இயலவில்லை
எனக்குள்ளே ஓர்குரல் போர்க்குரலாய் ஒலிக்கிறது
உன்னால் முடியும் முடியும் என்று.
உற்ச்சாக பெருவெள்ளம் காட்டாறாய் கரைபுரள்கிறது.
குறையோடு பிறந்தவன் நிறைவோடு வாழவில்லையா?
வாழ்வோடு போராடி வெற்றிவாகை சூடவில்லையா?
குறை இல்லாதவன் உலகில் இல்லையே
நிறை காண்பதே வாழ்வின் எல்லையே...!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Dec-24, 10:13 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vaazhvin ellaiye
பார்வை : 50

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே