PULAVARSUMATHI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : PULAVARSUMATHI |
இடம் | : பாரியூர் GOBICHETIPALAYAM |
பிறந்த தேதி | : 10-Jun-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 543 |
புள்ளி | : 35 |
தமிழ் ஆசிரியை
கவிதைகள் தான் எனது உயிர்
முயற்சி
முற்றுப் புள்ளியாய்
மட்டும் இருந்து விடாதே!
முயன்று சிறுகதிராய் மாறு !
கதிரானோம் என்ற
கர்வத்தை விடுத்து
உன்னைக் கரைத்து
உன்னத ஓவியமாய் மாறு!
உன்
ஞானம் உதிர்த்து
வண்ண மெருகேற்று
தான் என்னும்
அகந்தையை விடுத்தால் தானே
தரணியாள்வாய்!
உம் முயற்சியால்
நீயும் சரித்திரம் படைப்பாய்!
முயன்று பார் !
முடியாததும் முடியும்!
பாரியூர் தமிழ்க்கிளவி
பள்ளி
பிள்ளைப் பருவத்தின்
பிறந்த வீடு!
ஆனந்தத்தின் ஆனிவேரு!
அகரம் தொடங்கி
அனைத்தையும் அளிக்கும் பாரு!
ஆசானன்றி ஆதாரம் யாரு?
துயரற்ற இருதயத்தை நல்கி
தூக்கத்திலும் நகைக்க வைக்க
உன்னையன்றி பிறந்த இடம்
வேறு ஏது?
பள்ளியென்னும் மூவெழுத்து மந்திரமே
அன்பு , நட்பு என்னும்
மனமகிழ்ச்சி தருமே பாரு!
பாரியூர் தமிழ்க்கிளவி
கடல்
ஆழித்தாயே! ஆழ்கடலே!
இயற்கையளித்த இன்பமாம்
முப்பெரும் பாகமே
முப்பொழுதும் அலை வீசி
முகப்புன் காட்டுவாய்!
மானுடரைப் போல்
மனஅழுத்தம் கொண்டு
உம் பூமுகத்தை மறைத்து
சீற்றம் கொண்டு
சிகரத்தையே விழுங்குகிறாயே
தாயே உமக்குத் தகுமா?
பாரியூர் தமிழ்க்கிளவி
மழை
மயிலின் ஆட்டத்தில்
கருமேகத்தின் கூட்டத்தில்
மின்னல் வெளிச்சத்தில்
இடியின் தாளத்தில்
சில்லென்ற காற்றின்
சிலிர்ப்பில்
வானத்தாயின் பிரசவ வலியில்
பீறிட்டு நான்
பிறந்த வேளையில்
என் அன்னை மட்டுமா?
அகிலமே இன்பக் கடலில்
மூழ்குமே! பிறந்த நாள்
வாழ்த்துப் பாடுமே!
நான் யார் தெரிகிறதா?
யான் வானப் புயலாவேன்.
-பாரியூர் தமிழ்க்கிளவி
விட்டுக்கொடு
இதயம் தனது ஓய்வை
விட்டுக்கொடுத்தால் தான்
ஒரு நாளைக்கு
மூன்றாயிரத்து அறுநூற்று எண்பத்து ஒன்பது முறை துடித்து
நம்மை உயிரோடு உலவ வைக்கிறது !
உதிரம் கூட தன் ஓய்வை விட்டுக்கொடுத்தால் தான்
ஒரு நாளைக்கு
பதினாறு இலட்சத்து எண்பதாயிரம் மைல்கள் தூரம்
உதிரத்தை நம் உடலில் சுழற்றி
நம்மை உயிர் வாழ உவகை செய்கிறது !
நுரையீரல் தனது தனது ஓய்வை
விட்டுக்கொடுத்தால் தான்
இருபத்து மூன்றாயிரத்து நாற்பது முறை
சுருங்கி விரிந்து நம்மை சுவாசிக்க வைக்கிறது !
அஃறிணையான இவையெல்லாம் விட்டுக்கொடுக்கும்போது
உயர்திணையான நாம் ஏன் மறந்தோம் விட்டுக்கொடுக்க ?
விட்டுக்கொடுக்கும் மனப்ப