பள்ளி

பள்ளி

பிள்ளைப் பருவத்தின்

பிறந்த வீடு!

ஆனந்தத்தின் ஆனிவேரு!

அகரம் தொடங்கி

அனைத்தையும் அளிக்கும் பாரு!

ஆசானன்றி ஆதாரம் யாரு?

துயரற்ற இருதயத்தை நல்கி

தூக்கத்திலும் நகைக்க வைக்க

உன்னையன்றி பிறந்த இடம்

வேறு ஏது?

பள்ளியென்னும் மூவெழுத்து மந்திரமே

அன்பு , நட்பு என்னும்

மனமகிழ்ச்சி தருமே பாரு!

பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : வாழ்க்கை (24-Feb-19, 4:21 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : palli
பார்வை : 157

மேலே