பொங்கல்
பொங்கல்
வீடுவாசல் சுத்தம்செய்து வெள்ளையடிச்சு
பசுஞ்சாணமிட்டு மெழுகி விட்டு
பச்சரிசிக்கோலம் போட்டுபழையதை அழித்துவிட்டு
புத்தம்புது போகியைத்தான் கொண்டாடுவோம்
மார்கழிப் புள்ளத்தாச்சி தைமகளைப் பெத்தெடுத்தா
மண் மணக்கக் கோலமிட்டு
அறுத்த நெல்லைப் படையல் வைச்சோம்
ஆண்டவனே ஏத்துக்கனும் எங்களைத்தான் பாத்துக்கனும்
அதிகாலை கண்விழிச்சு ஆதவனை மனசில் வைத்து
புதுப்பானை பொங்கல் வைத்து
மாவிலைத் தோரணம் கட்டி
மஞ்சளோடுபொங்கலையும் ஏத்துக்கனும் சூரியனே !
பால்கொடுத்து நம்மையெல்லாம் காத்திடுவா நந்தினி
ஏர்உழுது சோறுபோடும் காளைகளை மனசில் வச்சு
கால்நடைக்குப் பொங்கல் வச்சோம்
காலமெல்லாம் காக்கவேணும் மகாலட்சுமியே !
சொந்த பந்தங்களை வரவழைச்சு
சுகமாத்தான் விருந்து வச்சு
சல்லிக்கட்டு ,சேவல்சண்டை ,ரேக்ளாவும் பார்த்துப்புட்டு
சலிக்காமபேசிச் சிரிப்போம் கரிநாளையும் கொண்டாடுவோம்.
பாரியூர் தமிழ்க்கிளவி