முயற்சி

முயற்சி

முற்றுப் புள்ளியாய்

மட்டும் இருந்து விடாதே!

முயன்று சிறுகதிராய் மாறு !

கதிரானோம் என்ற

கர்வத்தை விடுத்து

உன்னைக் கரைத்து

உன்னத ஓவியமாய் மாறு!

உன்

ஞானம் உதிர்த்து

வண்ண மெருகேற்று

தான் என்னும்

அகந்தையை விடுத்தால் தானே

தரணியாள்வாய்!

உம் முயற்சியால்

நீயும் சரித்திரம் படைப்பாய்!

முயன்று பார் !

முடியாததும் முடியும்!

பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 4:23 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : muyarchi
பார்வை : 2997

மேலே