பிரவின் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பிரவின் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 5 |
இன்று தான் நான் பார்க்கப்போகும் அந்த முதல் கொண்டாட்டம்!
இத்தினம், அவளை விரும்பியதால் ஏனோ எனக்கு மட்டும் வேண்டுமென ஓராசை!
எப்படி இந்த கொடுமை நிகழ்ந்திருக்க முடிந்தது..எப்படி நீ என் காதலி என்றானாய் என்றதை ஓர் நாள் நான் தேடத் தோல்வியா?இல்லை!எப்படி நான் உன் காதலன் என தேடத் தான் தோல்வியடி!!
நீ அன்றேனோ என் பார்வைக்கு, எல்லா அழகி வேடமிட்டவர்களைப் போலத்தான் தெரிந்தாய்;சிறு தயக்கத்துடன் நான் தொடங்கும் அசாத்திய நம் பேச்சுகளில், உன் அழகி வேசம் கலைந்தது;ஆமாம்!
அழகாகத்தானே வேசம்!அந்த அழகுக்கு இல்லையடி வேசம்.நீயும் என்னோடு சாதரணமாகப் பேச நான் எடுத்த முயற்சிக்கு,நிலவில் கூட முத்தை பலமுறை எடுத்து சலிப்ப
முதல் முத்த பதித்தல் நிகழ சதியாய் , என் தந்திரக்காதலியின் இதழ் இறுக்கச் சிரிப்பின் பேராக்கமே கண் எதிர்காணா மோகக்கன்குழி!
அதில் ஏறத் துணியா ஓர் முத்தம் செய்வேனே!!
கார்மேகக் கண்ணீர் நின் கருங்கூந்தல் தொட்டதடி!
உன் கூந்தல் தொட்ட மழைத்துளி புவி ஈர்ப்பை எதிர்த்ததடி!
வரம் பெற்ற ஓர் துளி உன் மனம் உரசி திளைத்ததடி!
கூடா ஆசையில் ஓர் துளி உன் இதழ் சுவைக்க வந்ததடி!
உன் இடை தொட்ட இன்பத்தில் சில துளி
ஆர்ப்பரித்து அலைந்ததடி!
அம்மேனி தொடா பாவத்துளி உன் பாதம் தொட்டு அமிர்தம் என்றானதடி!
நான் ரசித்த மழையோவியம் நீயடி!!
-பிரவின்
கார்மேகக் கண்ணீர் நின் கருங்கூந்தல் தொட்டதடி!
உன் கூந்தல் தொட்ட மழைத்துளி புவி ஈர்ப்பை எதிர்த்ததடி!
வரம் பெற்ற ஓர் துளி உன் மனம் உரசி திளைத்ததடி!
கூடா ஆசையில் ஓர் துளி உன் இதழ் சுவைக்க வந்ததடி!
உன் இடை தொட்ட இன்பத்தில் சில துளி
ஆர்ப்பரித்து அலைந்ததடி!
அம்மேனி தொடா பாவத்துளி உன் பாதம் தொட்டு அமிர்தம் என்றானதடி!
நான் ரசித்த மழையோவியம் நீயடி!!
-பிரவின்
அவள் அங்கம் தீண்டி அநாகரீகம் செய்யும் அதிகார கைப்பற்றலின் முதல் முயற்சியே காதல்!