காதலிப்போமாக
இன்று தான் நான் பார்க்கப்போகும் அந்த முதல் கொண்டாட்டம்!
இத்தினம், அவளை விரும்பியதால் ஏனோ எனக்கு மட்டும் வேண்டுமென ஓராசை!
எப்படி இந்த கொடுமை நிகழ்ந்திருக்க முடிந்தது..எப்படி நீ என் காதலி என்றானாய் என்றதை ஓர் நாள் நான் தேடத் தோல்வியா?இல்லை!எப்படி நான் உன் காதலன் என தேடத் தான் தோல்வியடி!!
நீ அன்றேனோ என் பார்வைக்கு, எல்லா அழகி வேடமிட்டவர்களைப் போலத்தான் தெரிந்தாய்;சிறு தயக்கத்துடன் நான் தொடங்கும் அசாத்திய நம் பேச்சுகளில், உன் அழகி வேசம் கலைந்தது;ஆமாம்!
அழகாகத்தானே வேசம்!அந்த அழகுக்கு இல்லையடி வேசம்.நீயும் என்னோடு சாதரணமாகப் பேச நான் எடுத்த முயற்சிக்கு,நிலவில் கூட முத்தை பலமுறை எடுத்து சலிப்புற்றிருக்கலாம்!
என்னை காதலிக்க வைக்க என்ன யுக்தியை கையாண்டாயோ?மெல்ல காதல் செய்தேன்!அன்றோடு நான் செய்த பாவம் தீர்ந்து உன்னுருவில் என்னை அழகாக துரத்தியது!
நான் செய்த பாவமா இவ்வளவு அழகு!என உன்னை பார்க்க!இன்னும் செய்திருக்கலாம் என யோசித்தேனடி!அய்யோ வேண்டாம்!இந்த உன் அழகு குறைவை பார்க்கவே என்னாயுள் போதாது.இதில் இன்னும் வேறா?என் பேராசைக்கு இந்த நீயே போதுமானது!
ஓ!!!நாம் இப்போது காதலர்களா?அதெப்படி மறந்தேன்,அந்த ஓர் முக்கிய நபரை!
ஒருதலைக்காதலர்?அவர் தானே நான் ஆக உன்னை உருகி காதலித்தார்!!அச்சிறு காலம் இச்சிறு பையனுக்கு ஓர் சிறு யுகம்!
காலை எழுந்ததும் காலை வணக்கம் சாதாரணம்.காலையில் உன் முகவணக்கம் நான் செய்த தவம்!
பெண்ணுக்கு மட்டும் கோலம் போடுதல் உரிமையென யார் சொன்னது?அவர்களுக்கு கோலத்தின் மேல் கோலம் போடத் தெரிந்தாலும்,உன் முகம் மேல் நான் தினம் வரையும்,ஏக்கத்தில் வருடும் அதற்கு ஈடு ,நிகழாத ஒன்றானால், என்னையும் அதில் முதல் சேர்ப்பில் மாற்றலாம்!
தினம் அவளை பார்க்கும் ஓர் பார்வை!
என்னை யார் பார்த்தாலும் கண் ஊனமா?என்பார்கள்!உனை பார்க்கும் போது சில அசைவை நீ தயவுசெய்து வெளிப்படுத்து.தேவதை சிலையை பலர் பார்த்ததில்லை!உன்னிடம் ஏமாந்துவிடுவார்கள்!நிலா கூட,யாரதை பார்த்தாலும் அவர்களை அது பார்ப்பது போலத் தெரியும்!ஆனால் நானுனை பார்க்க நீயெனை பார்க்காமல் ஏனடி!நீ அழகைப் பார்த்து வியந்திருக்க வாய்ப்பில்லை!அப்படி இருக்காது!
கண்ணாடியில் முகம் பார்த்தும் கூடவா உன் ஆணவம் அடங்கவில்லை!அப்படியும் இருந்திருக்கலாம்!கண்ணாடியில் தெரிபவளுக்குத் தானே உனை பார்த்து ஆணவம் அழிந்திருத்தலாகும்!
வைரம் பதித்த அந்த கண்ணை எங்கிருந்து திருடி வந்தாயோ!கூந்தல் விட்டு வேண்டா வெறுப்பாக விழுந்த உன் நெற்றி முடியை புத்தகத்தில் வைத்து அரிசி ஊட்டினேன்!அது ஏன் வளரவில்லை?உன் பொன் பூசிய நெற்றி அப்படி என்னதான் அதற்கு தந்திருக்கும்!மயிலிறகே அரிசியூட்ட வளர,அதற்கு என்ன அவ்வளவு திமிரோ?
நீ கை விரலில் திணித்திருக்கும் மோதிரம் என் கண்ணை அவ்வளவாக உருத்தவில்லை!பொன்சிலை கையில் ஓர் பிழையாகவே தெரிகிறது!
உன் பாதம், பூ பாதம்!இல்லையடி பூவின் பாதம்!மலர் பூமி தொடுமானால் அது உதிர்ந்திருக்கும்!உன் பாதம் தரை தொட பூமியே உறைந்திருக்கும்!நீ குளித்த தண்ணீரை சோதித்து பார்தேன்.அதில் உதிர்ந்த ரோஜாவாக உன் இமை முடியும்,வானவில் நுரைத்த சோப்பு நுரையும்,சந்தனம் குலைத்த மனமும் வீசுகிறது!மயங்கி எழுந்தால் ஓர் வயது கூடிவிட்டது எனக்கு!
உன் குரல் சத்தம்!நீ அப்படியே கொஞ்சம் சுற்றிப்பார்!குயிலுலகத்திற்குள் தான் நீ நின்று கொண்டிருப்பாய்!
இந்த அதிசயஉனக்கு நான் என்பது ஏனோ பொருந்தாததே!இருந்தாலும்
இருள்!நிலா! தான் எனக்குத் தெரிந்த அழகே!
நீயும் நானும் காதலிப்போமாக?