இராசசேகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இராசசேகரன் |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 25-Mar-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 4 |
தமிழ்க் கடலில் கவிதை முத்தெடுப்பேன். கதை மீன் பிடிப்பேன்.
அறையேதும்
இல்லாத
ஓலைக்குடிசைக்குள்
அன்பு மகள்
பெரியவளானாள்
ஆங்காங்கே
ஓட்டையுடன்
அறையொன்று
முளைத்து
ஆடி அசைகிறது
அதன் சுவர்
அசையும் சுவராய்
அம்மாவின்
பழைய சீலை

"டேய்..சங்கு...நாளைக்கு ஜல்லிக்கட்டுல ஜெயிச்சிடுவியிடா.. ?
பரம்பரை பரம்பரையா நாம தோத்ததே இல்ல.. என்னா..? புரியுதாடா ? " மன்னையன்
மீசையை முறுக்கியவாறே சங்கு வண்ணனை கேட்டுக் கொண்டே பெருமையாகப் பார்த்தார்.
சங்கு அவர் அருகில் வந்து அவரையே மேலும் கீழும் பார்த்தான்.
" டேய்.. அப்பா கேட்குறாங்கல்ல.. நீ பாட்டுக்கு பேசாம நிக்கிற..? நாளைக்கு ஜெயிச்சு அந்த மாருதி காரை வாங்குற.. அதுல போயிதான் உனக்கு பொண்ணு பாக்கப் போறோம்.. என்ன..? "
சங்கு வண்ணனுக்கு மன்னையன் மேல் ஏகப்பட்ட மரியாதை. தலையை மட்டும் ஆட்டி விட்டு கிணற்றுப்பக்கமாக நகர்ந
உன் ராஜசபையில்
நீ.. ராணி
எப்போதும் நான்..
விகடன்தான்
துக்ளக் சுல்தானாய்
நான் முரண்பட்டால்
நீ நெற்றிக்கண் திறக்கின்ற
எமகண்ட நேரத்தில்
என் உதடுகள் உளறி
தந்தியடிக்கும்
மன்னிக்கும் மனமில்லா
நக்கீரன் நீ
மங்கையர் மலரே
இந்து..
என் இந்திராணி
ஜன்னல் இடுக்கில்
எட்டிப்பார்த்து ஒளிர்ந்த
தினகரன்
மேற்கில் சரியும் நேரத்தில்
என் பயமும் சரிந்து
ஆசை முரசொலிக்கிறது
அருகே வா
உன்
குமுத விழி வலையில் சிக்கி
கல்கண்டு மொழி அலையில்
கரைந்து கரை சேர்கிறேன்
தின(ம்)மலரும்
மலர்கள் எத்தனை இருந்தாலும்
அந்த மாலை மலர்
மல்லிகை மட்டும்
உன் இருட்டுக்கூந்தலில்
ஏறியத் திமிரில்
என்னை மயக்
அங்கேயே இரு..
இன்னும் கொஞ்சம்
சோறூட்டி விடுகிறேன்
இடுப்பிலிருக்கும்
என் குட்டி நிலாவுக்கு
அதுவரை..
அங்கேயே இரு
விளக்கில்லா
குடிசைக்கு
விடிவிளக்கு
நீதான்..
விடியும் வரை
விலகாதே
அங்கேயே இரு
கணவனில்லா
வாழக்கையோடு
கனவுகளையும்
தொலைத்து நிற்கும்
இந்த
அபலைக்குத் துணையாய்
இரு..இரு..
அப்படியே
காவலிரு..
விலகாதே
வெண்ணிலவே
விடியும் வரை
விலகாதே..