R Nandhagopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  R Nandhagopal
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-May-2019
பார்த்தவர்கள்:  1014
புள்ளி:  9

என் படைப்புகள்
R Nandhagopal செய்திகள்
R Nandhagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 11:42 pm

வளர்ந்திட பொருளா தாரம்- வறிஞர்
வாழ்க்கை தரமும் மேம்படவே
மிளிர்ந்திட தூய்மை தெருவில்- வணிகம்
தொடங்க இலஞ்சமும் தொலைந்திடவே
தெளிந்திட மனித நேயம்- சாதி
சமயப் பூசலும் சரிந்திடவே
ஒளிர்ந்திட நாட்டில் அறிவியல் -அடைவோம்
வல்லரசாம் எனுமுயர் நிலையே

மேலும்

R Nandhagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 11:39 pm

அறியாமை என்னும் இருளகற்றி ஆய்வுப்
பொறியால் அறிவொளியும் ஏற்றிச்-செறிவாகப்
புள்ளியியல் கற்பிக்கும் பேராசான் சீலரே
உள்ளத்தால் நன்றி உமக்கு.

தெளிவாகக் கற்பிக்கும் தேர்ச்சியால் நீங்கள்
ஒளிவானச் செங்கதிரோன் ஒப்பீர்-எளிய
நகைச்சுவை கூட்டும் நளின உரையோ
வகைச்சுவை ஊட்டும் விருந்து.

மேலும்

R Nandhagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 11:37 pm

எங்கே இறைவன் இருக்கின்றான் என்றென்றே
எங்கும் திரியும் மனிதரே-தங்குமுயர்
தெய்வத் திருவுருவம் ஏழையின் புன்னகையாம்
உய்வதற்குச் செய்மின் அறம்.

மேலும்

R Nandhagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 11:35 pm

அழகான ஒருமாலைப் பொழுது- அருகில்
அலங்கார முகமாக அருள்பொழியும் நிலவு
முழுநீல வானமோர் சேலை-முகிலின்
வெண்சரிகை கலைவண்ணம் வெளிப்படுங் காலை
விழிக்கவரும் விண்மீன்கள் அணிகள்- வியக்கும்
தூரத்தில் களவின்றி வைத்தவன் பணிகள்
பழகிடும் நிலவுமோர் பெண்ணே- பழகும்
உறவது வளர்வதும் தேய்வதும் உண்டே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே